×

பைனாப்பிள் பிரியாணி

தேவையானவை:

பச்சரிசி – 2 கப்,
வில்லை களாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் – 6,
லெமன் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – ஒரு கப்,
மில்க்மெய்ட் – அரை கப்,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

பைனாப்பிளை மிக்ஸியில் நைஸாக அரைத்து நீர் சேர்த்து சக்கையை வடிகட்டி, 2 கப் அளவு சாறு தயாரித்துக் கொள்ளவும்.வெறும் வாணலியில் பச்சரிசியை லேசாக வறுத்து, ஒரு கப் தண்ணீர், அரை கப் மில்க்மெய்ட், பைனாப்பிள் சாறு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.சர்க்கரையுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு வைக்கவும். அத்துடன் ஏலக்காய்த் தூள், லெமன் ஃபுட்கலர், நெய் சேர்த்து, சாதத்தையும் சேர்த்து எல்லாமாக ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

The post பைனாப்பிள் பிரியாணி appeared first on Dinakaran.

Tags :
× RELATED விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்