×

மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய பயறுகள் – ஒரு கப்,
வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 2 பல்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகு – காரத்துக்கேற்ப,
கொத்த மல்லி தழை – தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்,
தேங்காய்ப் பால் – ஒரு கப்,
புளிக்காத கெட்டி தயிர் – அரை கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முளை கட்டிய பயறுகளை வேக வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்த மல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்த மல்லி தழை தூவி பரிமாறவும். சூப்பரான முளை கட்டிய நவதானிய சூப் ரெடி.

 

The post மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!