வழக்குகளை விரைவாக முடிப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

அருப்புக்கோட்டை: இந்தியாவில் வழக்குகளை விரைவாக முடிப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா நேற்றிரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை (பொ) நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தார்.

இதில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதித்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதற்கு எடுத்துக்காட்டாக விருதுநகர் மாவட்டத்தில் 4 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. நீதித்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உறுதுணையாக உள்ளது. நீதி காக்கப்பட வேண்டும்.

நீதி காக்கப்பட்டால் தான் நாட்டில் அமைதி நிலவும். இதை உணர்ந்தவர் முதல்வர். தற்போது போக்சோ, சைபர் கிரைம், பொருளாதார குற்றம் ஆகியவை பெருகி வருகின்றன. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால்தான் சிறிய குறையாக இருந்தாலும் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால், நீதிமன்றங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வழக்குகளை விரைந்து முடிப்பதில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.

The post வழக்குகளை விரைவாக முடிப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடம்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: