ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்!!

சென்னை : ஓசூரில் கிரீன்ஸ்பீல்டு சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தை ஒட்டிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவிப்பினை வெளியிட்டார். இந்த உத்தேச விமான நிலையம், 2000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக அமையும் என்றும் அவர் கூறி இருந்தார். இதையடுத்து, ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க தற்போதுள்ள தனியார் விமான ஓடுதளம் உட்பட 4 இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிமீ சுற்றளவில் புதிய விமான நிலையத்தை அனுமதிக்க முடியாது என்ற சிவில் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிகளை அடுத்து ஓசூரில் விமானப் பாதையை தன் வசம் வைத்திருக்கும் தனேஜா ஏரோ ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிட்ட் உள்ளிட்ட பல்வேறு பங்கு தாரர்களுடன் தமிழக அரசு பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைவிடம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சமீபத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ் அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

The post ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Related Stories: