தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து

சென்னை: தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்கள் ரத்து. தாம்பரம் ரயில்வே பணிமனை, ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள். மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக கூடுதல் பேருந்துகளை இயக்க பயணிகள் வலிவுறுத்தியுள்ளனர்.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் நேற்று வரை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. 55 மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்புகள் ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல, கூடுவாஞ்சோியிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சோிக்கு இரவு 11 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் 29-ம் தேதி முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை பகல் நேர மின்சார ரயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மின்சார ரயில் சேவைகள் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: