×

நிபா காய்ச்சல் பீதி குறைந்தது தமிழக எல்லையில் சுகாதாரத்துறை சோதனைக்கு கேரளா எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை வேறு யாருக்கும் நிபா காய்ச்சல் உறுதி செய்யப்படாததால் இதன் மூலம் ஏற்பட்ட பீதி படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் தமிழக சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு கேரள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்மில் (14) என்ற சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்து மரணமடைந்தது கேரளாவில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

வேறு யாருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்று தெரிய வந்துள்ளதால் மலப்புரம் மாவட்டத்தில் நிபா ஏற்படுத்திய பீதி படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பாண்டிக்காடு மற்றும் ஆனக்கயம் பஞ்சாயத்துகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் நிபா பரவியபோது தமிழக எல்லையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டன. இதற்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தவறான நடவடிக்கையாகும் என்றும், இது தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

The post நிபா காய்ச்சல் பீதி குறைந்தது தமிழக எல்லையில் சுகாதாரத்துறை சோதனைக்கு கேரளா எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Health Department ,Tamil Nadu ,Thiruvananthapuram ,minister ,Dinakaran ,
× RELATED 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய...