சென்னை: ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் ஆன்மிக சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா பேருந்துகள் கடந்த 17ம் தேதி அன்று முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது.
ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-1 சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பாரிமுனை காளிகாம்பாள் கோவில், இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருமுல்லைவாயில் திருவுடையம்மன் கோவில், திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில், கொரட்டூர் செய்யாத்தம்மன் கோவில், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000/-.ஆகும்.
ஆடி அம்மன் சுற்றுலா சென்னை-2; சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு மைலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், மைலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில், மைலாப்பூர் கோலவிழியம்மன் கோவில், தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில், தி.நகர் முப்பாத்தம்மன் கோவில், சைதாபேட்டை பிடாரி இளங்காளி அம்மன் கோவில், பெசண்ட் நகர் அஷ்டலெஷ்மி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், கீழ்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.800/- ஆகும். இச்சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், ஆன்மீக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com
The post ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா பேருந்துகள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.