×

உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்கிட கோரி ஆர்ப்பாட்டம்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 24: அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விஷவாயு மரணங்களை தடுத்திட உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறை பாடப்பிரிவை உருவாக்கிட வலியுறுத்தி கோரிக்கை முழக்க போராட்டம் ஆண்டிமடம் நான்கு ரோடு அருகில் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரியலூர் மாவட்ட செயலாளர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சலோமி, ஒன்றிய செயலாளர் இளவரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் பத்மாவதி, சங்கு பாலன், கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் மனித மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக தொடர்கிற விஷவாயு மரண நிலை மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் துப்புரவு பொறியியல் துறையை துவக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாவட்ட மாநில நிர்வாகிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்கிட கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : JAYANGONDAM ,ARYALUR DISTRICT ,TAMIL ,NADU ,DISASTER ERADICATION ,TAMIL NADU ,DISASTER ,ANTIMADAM ,Dinakaran ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை