×

கண்டியாநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

 

பொன்னமராவதி,ஜூலை 23: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் மாவட்டத்திற்குள்ளான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிறு வகை பயிர்கள் பற்றிய விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தொடங்கி வைத்தார்.

பொன்னமராவதி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் புஸ்கரம் வேளாமை கல்லூரி உதவி பேராசிரியர் ஜெயராணி ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிறு வகை பயிர்கள் பற்றி விவசாயிகள் பயிற்சி வழங்கினார்.விவசாயிகளுக்கு இயற்கை உரம் வழங்குவது மற்றும் நுண்ணூட்டச்சத்து வழங்குவது பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் மலர்விழி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நவீன்குமார் ,பிரசாந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த பயிற்சியில் கண்டியாநத்தம், புதுப்பட்டி, கேசராபட்டி, பூதன்வளவு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post கண்டியாநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Kandiyanantham village ,Ponnamaravati ,Tamil Nadu Government Agriculture Department Agriculture Technology Management Agency ,Pudukottai District ,Ponnamaravati District ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் 42...