×

இருமடங்கு பணம் தருவதாக கூறி வாலிபரிடம் ₹43 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் பைனான்ஸ், சீட் பண்ட் நடத்தி

வேலூர், ஜூலை 23: பண்ட், சிறுசேமிப்பு திட்டங்கள் நடத்தி இருமடங்கு பணம் தருவதாக கூறி ₹43 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாலிபர் புகார் மனு அளித்தார்.
வேலுார் கொசப்பேட்டையை சேர்ந்த 30 வயது வாலிபர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: வேலுார் சலவன் பேட்டையை சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு எனக்கு அறிமுகமாகி நல்ல முறையில் நட்பாக பழகி வந்தார். மேலும், அவர் பைனான்ஸ், சிட் பண்ட், பட்டாசு பண்ட், பொங்கல் சிறுசேமிப்பு ஆகிய திட்டங்களை சிறப்பாக நல்ல முறையில் நடத்தி வருகிறேன். உன்னிடம் பணம் இருந்தால் என்னிடம் கொடு. நீ கொடுக்கும் பணத்தை 2 மடங்காக திருப்பி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார். அவரது வார்த்தகளை நம்பி நானும் எனது வங்கி கணக்கு மூலமும், நேரடியாகவும், நகைகளை அடமானம் வைத்தும் ₹43 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். மேலும், பணம் பெற்றுகொண்டதற்கான அடையாளமாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். என்னிடம் வாங்கிய பணத்தை ஏற்கனவே அவர் கடன் வாங்கி இருந்த 10 பேருக்கு பைசல் செய்து விட்டார். கார்த்திகேயனிடம் நான் ₹43 லட்சம் கொடுத்ததற்கு வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே, மோசடி நபரை அழைத்து விசாரித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இருமடங்கு பணம் தருவதாக கூறி வாலிபரிடம் ₹43 லட்சம் மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் பைனான்ஸ், சீட் பண்ட் நடத்தி appeared first on Dinakaran.

Tags : Vellore ,SP ,Vellore SP ,Vellore Kosappettai ,Dinakaran ,
× RELATED தண்ணீர், ரேஷன் பொருட்கள் வாங்க தடை...