×

காலை வாரிவிட்டு ஒன்றிணைப்பா? ‘பன்னீரை நீக்கியது சசிகலா சசிகலாவை தடுத்தது பன்னீர்’: அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்

திருப்புவனம்: சசிகலா, ஓபிஎஸ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காலை வாரி விட்டதுடன், மீண்டும் கட்சியை கைப்பற்ற ஒன்றிணைந்துள்ளதாக குற்றம் சாட்டி சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை கிளம்பியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதி அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘‘தென்மாவட்ட மக்கள் கவனத்திற்கு: பன்னீரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது சசிகலா. சசிகலா முதல்வராவதை தடுத்தது பன்னீர். சசிகலா, தினகரன் இருவரையும் அதிமுகவில் இருந்து நீக்கினால் தான் கட்சியில் சேருவேன் என அடம்பிடித்து சொன்னது பன்னீர்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் நன்றி தெரிவித்து வருகிறார். சசிகலாவும் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், அதிமுக சார்பில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தினமும் போஸ்டர்கள் ஒட்டப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே மானாமதுரை தொகுதியில்தான் அதிமுகவினர் அதிகம். மானம் காத்த மானாமதுரை தொகுதி என அதிமுகவினர் கூறுவார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மானாமதுரையில் அதிமுகவுக்கு 3வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post காலை வாரிவிட்டு ஒன்றிணைப்பா? ‘பன்னீரை நீக்கியது சசிகலா சசிகலாவை தடுத்தது பன்னீர்’: அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Sivaganga district ,Sasikala ,OPS ,Dinakaran ,
× RELATED கட்சிக்கொடி கம்பங்களை அகற்றும்...