×

கன்னியாகுமரி கடற்கரையில் இன்று முகாமிட்ட சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாரவிடுமுறை அன்றும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்க வருவார்கள். அந்த வகையில் இன்று வாரவிடுமுறை என்பதால் காலையிலேயே சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரைக்கு படையெடுத்தனர். சூரிய உதயத்தை பார்த்து ரசித்த பிறகு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்வதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.ஆனால் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்துபோனதால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையின் பிற பகுதிகளை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டனர். சில மணி நேரத்தில் கடல் நீர்மட்டம் சீரான பிறகு படகு சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் ஏறிச்சென்று கடல்நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் இன்று கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது.

The post கன்னியாகுமரி கடற்கரையில் இன்று முகாமிட்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari beach ,Kanyakumari ,Tamil Nadu ,
× RELATED கன்னியாகுமரி மீன் சந்தைகளில் அதிகாரிகள் சோதனை..!!