×

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என முதல்வர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர்வரின் சமுக வலை தளப்பதிவில்:
* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
* தாம்பரம் -செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்துக்குக்கான ஒப்புதல் வழங்க வேண்டும்.
* 10 ஆண்டுகளாக வருமான வரி சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தர குடும்பங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
* தமிழ்நாட்டில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்
* கிராமப்புற, நகர்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்.
* கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : EU ,Tamil Nadu ,PM MLA ,K. Stalin ,Chennai ,Modi ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Chief Minister ,Parliament ,Union Government ,Mu K. Stalin ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில்...