×

ரெகுநாதபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 21: ரெகுநாதபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்துறைப்பூண்டி அருகே நுணாக்காடு ஊராட்சிக்குட்பட்ட ரெகுநாதபுரம் பிள்ளையார் கோவில் அருகே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த மேல்நிலைகுடிநீர் தேக்க தொட்டி சேதம் அடைந்து உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் உடனடியாக சேதமடைந்த குடிநீர் மேல்நிலைதேக்க தொட்டியை இடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே சேதம் அடைந்து இருக்கும் காரணத்தினால் புதிதாக அருகில் புதிய மேல்நிலைநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரெகுநாதபுரம் பகுதியில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Regunathapuram ,Thirutharapoondi ,Rekunathapuram Pilliyar temple ,Nunakkadu Panchayat ,Thiruthuraipoondi ,Rekunathapuram ,
× RELATED திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டை தேங்காய் வழிபாடு