×

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

 

கும்பகோணம், ஜூலை 21: கும்பகோணம் பருவதராஜ மீனவர் நல அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
கும்பகோணம் பருவதராஜ மீனவர் நல அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற 64 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி பருவதராஜ குல சங்கத்தில் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலர் மணிவண்ணன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசைத்தம்பி வரவேற்றார். ஆசிரியர் பிரபு, மாணவ மாணவிகளை ஊக்குவித்து பாராட்டி வாழ்த்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற 64 மாணவ மாணவிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி ஊக்கத்தொகையும், நோட்டு புத்தகங்களும், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாலு, சசிகுமார், கோபால், மோகன், மாரியப்பன், செந்தில்குமார், பழனிசாமி, கணேசன், அருமைதுரை, தங்கவேலு, சுந்தரம், சீனிவாசன், கார்த்திகேயன், செல்வராஜ், சதீஷ் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க மேலாளர் செல்வம் நன்றி கூறினார்.

 

The post மாணவர்களுக்கு ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Fishermen's Welfare Trust ,
× RELATED ஜாதி ரீதியான பேச்சு: கும்பகோணம்...