நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்

நைஜீரியா: லேகோஸ் மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் சார்பில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்தியன் லேங்குவேஜ் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். 35 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பள்ளி மாணவர்கள் 11 பேர் இப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்த 1 மாதத்திற்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியன் லேங்குவேஜ் பள்ளி மாணவர்கள் 11 பேரும் தனித்துவம் கூட்டு மதிப்பெண் பெற்று குழுவாகவும், தரை, வால்ட் மற்றும் ட்ராம்போலின் உட்பட அனைத்து வகையிலும் தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து முதலிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வங்கப்பட்டது.

Related Stories: