* யுரோ கோப்பை, கோபா கோப்பை என முக்கிய கால்பந்து போட்டிகள் முடிந்ததையடுத்து ஃபிபா தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி உலக, கோபா சாம்பியன் அர்ஜென்டீனா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. பிரான்ஸ் 2வது இடத்தில் உள்ளது. யுரோ கோப்பை சாம்பியன் ஸ்பெயின் 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தையும், 2வது இடம் பிடித்த இங்கிலாந்து ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தையும் பிடித்துள்ளன. கோபா கோப்பையில் 2வது இடம் பிடித்த கொலம்பியா 3இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்தது. இந்தியா அதே 124வது இடத்தில் நீடிக்கிறது.
* இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து பெண்கள் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த டி20 தொடரிலும் 4-0 என்ற கணக்கில் முன்னிலையை தொடர்ந்தது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேற்று லண்டனில் நடந்தது. அதிலும் இங்கிலாந்து 20ரன் வித்தியாசத்தில் 5வது வெற்றியை பதிவு செய்தது. அதனால் ஒருநாள் தொடரை போலவே டி20 தொடரிலும் நியூசிலாந்து பெண்கள் அணி ஒயிட் வாஷ் ஆனது.
* இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் நேற்று நாட்டிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரெவ்லி டக் அவுட்டாகினார். அதனையடுத்து ஆலிவ் போப் உடன் இணைந்தார் பென் டக்கெட். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 104ரன் குவித்தனர். அரைசதம் விளாசிய டக்கெட் 71ரன்னில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை நிதானமாக விளையாடி வருகிறது.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.