- ஆளுநர் ஆர்.என்.ரவி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- சென்னை
- புதுக்கோட்டை
- திருவண்ணாமலை
- நாமக்கல்
- காரைக்குடி
- நகராட்சிகள்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் கழிவு நீர் இணைப்பை கட்டாயமாக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த ஒப்புதல். புதிய மாநகராட்சி உருவாக்க வருவாய், மக்கள் தொகை வரம்புகள் குறைத்தல் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல். சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யும் மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல். மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர் ஆகிய நகரங்களுக்குவிரிவாக்கம் செய்வதற்கான சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றம். ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலானது.
The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் appeared first on Dinakaran.