×

வாழைத்தண்டு மிக்ஸட் சாலட்

தேவையானவை:

இளம் வாழைத்தண்டு நாரின்றி நறுக்கியது – 1 கப்,
வேகவிட்ட வேர்க்கடலை – 50 கிராம்,
பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரி, மாங்காய் சேர்த்து – 1 கப்,
தேங்காய் துருவல் ¼ கப்,
உப்பு – தேவையான அளவு,
மல்லி, புதினா நறுக்கியது – ¼ கப்,
பொடியாக நறுக்கிய சற்றே பழமான தக்காளி – 1,
எலுமிச்சை சாறு – 1 பழம்.

தாளிக்க:

நெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – ¼ டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய் பொடி – ¼ டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது.

செய்முறை:

வாணலியில் நெய் சூடாக்கி தாளிக்கும் பொருட்களை கொண்டு தாளித்து ஆறவிடவும். இதர சாலட்டுக்கான பொருட்களை ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து ஆறவிட்ட தாளிப்பைச் சேர்த்து பரிமாறவும்.

The post வாழைத்தண்டு மிக்ஸட் சாலட் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!