×

வாழைத்தண்டு புளி பச்சடி

தேவையானவை:

நாரில்லா இளம் வாழைத்தண்டு நறுக்கியது – ½ கப்,
புளிக்கரைசல் (நீர்க்க) – ½ கப்,
இடித்த பூண்டு, பச்சை மிளகாய் – தலா 2,
நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1,
உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
பொடித்த வெல்லம் – சிறிது.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் – தலா ¼ டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 1,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் சூடாக்கி தாளிக்கும் பொருள் தாளிக்கவும். உடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், இடித்த பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து கொதி வருகையில் வெல்லம் சேர்த்து குக்கரை மூடி, 2 விசிலில் நிறுத்தவும். ஆறிய பின் மீண்டும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் மேலாக விட்டு கிளறி பரிமாறவும். வாழைத்தண்டு உணவில் சேர்ப்பது சிறுநீரக கற்களை கரைப்பதோடு, சிறுநீர் சிரமமின்றி கழிக்கவும் உதவும்.

 

The post வாழைத்தண்டு புளி பச்சடி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!