மதுரை: திருவிழாவுக்காக ரூ.10,000 வரி செலுத்தாவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கிவைப்போம் என மிரட்டல் விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவதாக மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி தேவகோட்டை இரவுசேரியை சேர்ந்த சேது முத்தையா என்பவர் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாத்ரேய முனீஸ்வரர் கோவிலை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் 4 வாரத்தில் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு ஐகோர்ட் கிளை வழக்கை முடித்து வைத்தது.
The post ஊரை விட்டு ஒதுக்குவதாக மிரட்டல்: விசாரணை நடத்த ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.