×
Saravana Stores

விஷச் சாராய வழக்கு: புதன்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பான வழக்கை புதன் கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. சொந்த காரணங்களுக்காக விசாரணையை தள்ளி வைக்க தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. 5 மனுக்களுக்கும் பதில் மனுக்கள், அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுவிட்டது என்று அரசு தலைமை வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

The post விஷச் சாராய வழக்கு: புதன்கிழமைக்கு ஐகோர்ட் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Kalalakurichi ,-saraya ,Chief Justice ,Krishnagumar ,CBI ,
× RELATED புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!