×
Saravana Stores

காவல்துறை சார்பில் சாலைப்புதூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம், ஜூலை 18: சாலைப்புதூரில் காவல்துறை சார்பில் மாற்றத்தைத் தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின்படி காவல்துறை சார்பில் தூத்துக்குடியை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும் வகையில் மாற்றத்தைத் தேடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சாத்தான்குளம் யூனியன், நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூரில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி தலைமையிலான போலீசார் காவல்துறை சார்பில் மாற்றத்தைத் தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமண தடைச் சட்டம், போக்சோ சட்டங்கள், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

The post காவல்துறை சார்பில் சாலைப்புதூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Chaliputur ,Thoothukudi S. B. ,Balaji Saravan ,Tuticorin ,
× RELATED அரசு பணிக்கு போலி ஆணை இன்ஸ்பெக்டர்...