×
Saravana Stores

அஞ்சல் துறை சார்பில் அம்பை பள்ளியில் கிராம சபை கூட்டம்

அம்பை, ஜூலை 18: அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் அஞ்சல் துறை சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் அழகியநம்பி தலைமை வகித்தார். அம்பை தலைமை அஞ்சல் அதிகாரி தியாகராஜ பாண்டியன், அம்பை உப கோட்ட அதிகாரி கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்புத்திட்டம், காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவை மற்றும் ஆதார் சேவை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கிப் பேசினர். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post அஞ்சல் துறை சார்பில் அம்பை பள்ளியில் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambai ,school ,Ambasamudram Theerthapati High School ,Headmaster ,Ajyayanambi ,Chief Postal Officer ,Thiagaraja Pandian ,Sub ,Divisional Officer ,Ganapathi Subramanian ,Gram Sabha ,Department ,Dinakaran ,
× RELATED கடையம் அருகே நாய்கள் விரட்டியதில் கீழே விழுந்து மிளா சாவு