×
Saravana Stores

திருச்சியில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

 

திருச்சி, ஜூலை 18: திருச்சியில் வாலிபரிடம் பணம் பறித்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ்(36). இவர் தென்னூரில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். தென்னூர் அரச மரத்தடி பஸ் ஸ்டாப்புக்கு நண்பர் ராஜாவுடன் பாக்கியராஜ் நேற்று முன்தினம் வந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், பாக்கியராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை பறித்து சென்ற தென்னூர் வாமடத்ைத சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(20), குருமூர்த்தி (எ) காட்டு ராஜா(22) ஆகியோரை கைது செய்ததுடன் பணம், கத்தியை பறிமுதல் செய்தனர்.

The post திருச்சியில் வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Pakyaraj ,Trichy Cantonment ,Tasmac Bar ,Tennur ,Tennoor ,
× RELATED வலிமையோடு, உறுதியோடு இருக்கிறது திமுக...