- திமிதி விழா
- பூலாம்பாடி தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில்
- பெரம்பலூர்
- தர்மராஜா
- Draupadi
- அம்மன்
- மிதித்து
- ஊரணி பொங்கல் விழா
- பூலாம்பாடி
- பூலாம்பாடி,
- வேப்பந்தட்டா தாலுக்கா
- பெரம்பலூர் மாவட்டம்…
பெரம்பலூர், ஜூலை 18: பூலாம்பாடி கிராமத்தில் தர்மராஜா, திரௌபதி அம்மன் ஆலய தீ மிதித் திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா, திரௌபதி அம்மன் ஆலய தீமிதித் திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற் றது. விழாவை முன்னிட்டு கடந்த 8ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பாரத கதை பாடப்பட்டு வந்த நிலையில், கடைசியாக பால்குடம் எடுத்தல், அக்னி சட்டிஎடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திரு விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதற்காக நல்ல தண்ணீர் குளத்திலிருந்து கரகம் பாலித்து அருளோடு புறப்பட்டு வந்த பக்தர்கள், தீ மிதித்துத் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். விழாவில் மலேஷிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் நிக்சன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளில் பூலாம்பாடி மட்டு மன்றி, பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி, கடம்பூர், அரும்பாவூர், உடும்பியம், மேலக்குணங்குடி, அரசடிக்காடு உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post பூலாம்பாடி தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.