பெரம்பலூர், ஜூலை 18: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஆசிரியை தீபா கொலை வழக்கின் குற்ற வாளியான வெங்கடேசன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஆசிரியை யான தீபா என்பவரை கொலைசெய்த வழக்கின் குற்றவாளியான, குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (37) என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
எஸ்பியின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் கற்பகம், வெங்கடேசனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ், திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் போலீசாரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.
The post பெரம்பலூரில் ஆசிரியை கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.