×
Saravana Stores

மாவட்டங்களுக்கிடையேயான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

 

தேனி, ஜூலை 18: தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம் நடத்தும் 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 13 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கிடையேயான போட்டியில் பங்கு பெற தேனி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளக்கான தேர்வு வருகிற 20ம் தேதி(நாளைமறுதினம்) தேனி மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வு அன்றைய தினம் காலை 7 மணிக்கும், 13 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வு அன்றைய தினம் காலை 8 மணிக்கும் நடக்க உள்ளது. இதில் 16 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள் 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 13 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள் 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பிறந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளுடன் தேனி மாவட்ட கூடைந்து மைதானத்திற்கு வரவேண்டும் எனவும், இதுதொடர்பான தொடர்புக்கு 94421 51345 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கூடைப்பந்துக் கழக செயலாளர் அஸ்வின்நந்தா தெரிவித்தார்.

The post மாவட்டங்களுக்கிடையேயான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Men's ,Women's Teams ,Tamil Nadu Basketball Club ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா முகாம்