×
Saravana Stores

மானாமதுரையில் ரயில்வே தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

 

மானாமதுரை, ஜூலை 18: மானாமதுரையில் எஸ்ஆர்எம்யூ ரயில்வே தொழிலாளர்கள் ஒன்றிய அரசு ரயில்வே தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி மானாமதுரை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். மானா மதுரை எஸ்ஆர்எம்யூ கிளைச் செயலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மதுரைக் கோட்ட உதவிச் செயலர் சீதாராமன் சிறப்புரையாற்றினார். இதில் மானாமதுரை கிளை நிர்வாகிகள் சங்கரதாஸ், இருளப்பன், கணேசன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

The post மானாமதுரையில் ரயில்வே தொழிலாளர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,SRMU ,union government ,Union ,President ,Sivakumar ,
× RELATED தாம்பரத்தில் இருந்து மானாமதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்