×

உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி மாபெரும் வெற்றி பெறும்: அகிலேஷ் யாதவ் உறுதி

லக்னோ: மக்களவை தேர்தலில் வென்ற சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் சமாஜ்வாடி பேரவை உறுப்பினர்கள் 8 பேர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் சமாஜ்வாடி பேரவை உறுப்பினர் இர்பான் சோலங்கிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 10 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் லக்னோவை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஜய் பகதூர், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று சமாஜ்வாடியில் சேர்ந்தார். அவரை கட்சிக்கு வரவேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “உத்தரபிரதேச பாஜவில் உள்கட்சி பூசல் உள்ளது. பதவிகளுக்காக கட்சியினர் சண்டை போடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரவைக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சமாஜ்வாடி சிறப்பாக செயல்பட்டு மக்களவை தேர்தலை விட பெரிய வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

The post உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி மாபெரும் வெற்றி பெறும்: அகிலேஷ் யாதவ் உறுதி appeared first on Dinakaran.

Tags : U. B. ,SAMAJWADI ,AKILESH YADAV ,Lucknow ,Akilesh Yadav Karhal ,Lok Sabha ,MLA ,Samajwadi Council ,Irfan Solangi ,Dinakaran ,
× RELATED வெளியுறவு கொள்கை தோல்வி: அகிலேஷ் யாதவ் விமர்சனம்