சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணிகள் வருகின்ற ஜூலை 23ம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள ரயில் சேவைகளின் விவரங்களை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
1. தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் 20691 தாம்பரம் நாகர்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில், ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை ரத்து.
2. நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.50க்கு புறப்படும் 20692 நாகர்கோவில் – தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில், ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை ரத்து.
மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்களின் விவரம்
1. பிகானீரில் ஜூலை 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு ஜூலை 23ம் தேதி காலை சென்னை எழும்பூர், தாம்பரம் வழியாக பயணிக்க வேண்டிய 22632 பிகானீர் – மதுரை விரைவு ரயில், பெரம்பூர், அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக செல்லும். இந்த ரயில் பெரம்பூருக்கு காலை 9.15க்கு வந்து 9.20க்கு புறப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் செல்லாது.
2. சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 23 முதல் ஜூலை 31ம் தேதி இரவு 11.55க்கு புறப்படும் 22153 சேலம் விரைவு ரயில், தாம்பரம் ரயில் நிலையம் செல்லாது. இந்த ரயில் சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு தடத்தில் இயங்கும்.
3. புதுச்சேரியில் இருந்து ஜூலை 24 மற்றும் 31ம் தேதிகளில் காலை 9.55க்கு புறப்படும் 22403 புது டெல்லி விரைவு ரயில், சென்னை எழும்பூர் வழியாக செல்லாது. இந்த ரயில் செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும், பெரம்பூருக்கு பகல் 1.35க்கு வந்து 1.40க்கு புறப்பட்டு செல்லும்.
4. ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 24 மற்றும் 31ம் தேதிகளில் இரவு 11.55க்கு புறப்படவுள்ள 22535 பனாரஸ் விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை புறக்கணித்து செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும் பெரம்பூருக்கு பகல் 1.35க்கு வந்து 1.40க்கு புறப்பட்டு செல்லும்.
5. திருச்சியில் இருந்து ஜூலை 27ம் தேதி காலை 8.10க்கு புறப்படவுள்ள 20482 பகத் கீ கோதி – ஜோத்பூர் விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை புறக்கணித்து செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும். பெரம்பூருக்கு பகல் 1.35க்கு வந்து 1.40க்கு புறப்பட்டு செல்லும்.
6. மும்பையில் இருந்து ஜூலை 27ம் தேதி பகல் 1.15க்கு புறப்பட்டு ஜூலை 28ம் தேதி அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம் வழியாக செல்ல வேண்டிய 11017 காரைக்கால் வாராந்திர ரயில், திருத்தணியில் காலை 9.05க்கு வந்து 9.10க்கு புறப்பட்டு காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு செல்லும்.
7. ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28ம் தேதி 00.30க்கு புறப்படும் 22613 அயோத்யா ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை புறக்கணித்து செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும். பெரம்பூருக்கு பகல் 1.35க்கு வந்து 1.40க்கு புறப்பட்டு செல்லும்.
பகுதி தூரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்
1. சென்னை எழும்பூரில் இருந்து புறப்படவுள்ள மதுரை வைகை விரைவு ரயில், ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் எழும்பூர் செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
2. ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படவுள்ள திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில், ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 00.40க்கு புறப்பட்டு செல்லும் இந்த ரயில் எழும்பூர்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
3. 15929 தாம்பரம் – நியூ இன்சுகிய விரைவு ரயில், ஜூலை 25ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திற்கு
பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7,15க்கு புறப்பட்டு செல்லும்.
4. தாம்பரத்திற்கு ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை வந்து சேர வேண்டிய 12760 ஹைதராபாத் தாம்பரம் விரைவு ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
5. தாம்பரத்தில் இருந்து ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மாலை 5.30க்கு புறப்படவுள்ள
12759 ஹைதராபாத் சார்மினார் ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.20க்கு புறப்படும்.
6. ஜூலை 23, 25, 27, 28, 30 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் தாம்பரத்திற்கு வந்து சேர வேண்டிய 20684 செங்கோட்டை தாம்பரம் விரைவு ரயில், விழுப்புரம் தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
7. தாம்பரத்தில் இருந்து ஜூலை 24, 25, 28, 30ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் 20683 செங்கோட்டை விரைவு ரயில், இரவு 11.15கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரம் – விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
8. தம்பரத்திற்கு ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் வந்து சேர வேண்டிய 12376 தாம்பரம் விரைவு ரயில், சென்னை எழும்பூர் வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் சென்னை எழும்பூர்- தாம்பரம் இடையே ரத்து.
9. தாம்பரத்தில் இருந்து ஜூலை 27ம் தேதி பகல் 1 மணிக்கு புறப்படவுள்ள 12375 ஐசிடித் விரைவு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1.35க்கு புறப்படும்.
10.காரைக்குடியில் இருந்து காலை 5.35கு புறப்படும் 12606 சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், ஜூலை 23ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் செங்கல்பட்டு சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
11.தாம்பரத்தில் இருந்து ஜூலை 24, 28, 29, 31ம் தேதிகளில் இரவு 7.30க்கு புறப்படவுள்ள 22657 நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும்.
12. நாகர்கோவிலில் இருந்து ஜூலை 22, 23, 25, 29, 30ம் தேதிகளில் மாலை 4.30க்கு புறப்படவுள்ள 22658 தாம்பரம் விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 4.35க்கு வந்து சேரும்.
13. மங்களூரில் இருந்து ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை காலை 6.45க்கு புறப்படும் 16160 சென்னை எழும்பூர் விரைவு ரயில், திருச்சி சென்னை இடையே ரத்து செய்யப்படுகிறது.
The post தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.