×
Saravana Stores

சென்னை புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது..!!

சென்னை: சென்னை புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் ரவுடி சேதுபதி என்பவரை துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சோழவரம் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார் ரவுடி சேதுபதி. இவர் மீது 5 கொலை வழக்குகளும், கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் இவர் தலைமறைவாகியிருந்தார். அதன் பின்னர் இவரை தனிப்படை காவல்துறையினர் தேடிவந்தனர்.இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் பதவி ஏற்ற பின்பு ரவுடிகளை ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட ரவுடிகளை ஒடுக்கக்கூடிய தனிப்படை காவல்துறையினர் சூரப்பட்டு ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இவர் மீது மாதவரம், மீஞ்சூர், காட்டூர், புழல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, தொழிலதிபர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனுக்கு எதிர் தரப்பினராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

The post சென்னை புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Rowdy Sethupathi ,Surabatu ,Puzhal, Chennai ,CHENNAI ,Sethupathi ,Special Forces Police ,Cholavaram Police Station ,
× RELATED கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு