×
Saravana Stores

கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு பெற்று தந்த அமைச்சர் மனோ தங்கராஜூக்கு நன்றி தெரிவித்த கால்நடை மருத்துவர்கள் சங்கம்..!!

சென்னை: கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு பெற்று தந்த அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கால்நடை மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தை சார்ந்த பல்வேறு ஒன்றியங்களில் பணிபுரிந்த 29 கால்நடை மருத்துவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற உதவி பொது மேலாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆவின் கால்நடை மருத்துவர்கள் சங்கம் சார்பாக பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜூக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கிட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து, உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் பால் பணப் பட்டுவாடா வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளின் கால்நடைகளுக்கு தமிழக அரசாங்கம் வழங்கும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.

The post கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு பெற்று தந்த அமைச்சர் மனோ தங்கராஜூக்கு நன்றி தெரிவித்த கால்நடை மருத்துவர்கள் சங்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Veterinarians Association ,Minister ,Mano Thangaraju ,CHENNAI ,Tamil Nadu Cooperative Milk Producers Unions ,Minister Mano Thangaraju ,
× RELATED இர்ஃபான் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்