×
Saravana Stores

உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கி.வீரமணி கண்டனம்

சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். “காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பதா?. தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் மிகச் சரியானவை மட்டுமல்ல; தேவையானவையும்கூட. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கூட்டத்தில் நிறைவேற்றிய மூன்று தீர்மானங்களும் முத்தானவை. வரும் 23-ம் தேதி தஞ்சையில் திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,Karnataka government ,Tamil Nadu ,Supreme Court ,Chennai ,Dravidar ,Kazhagam ,president ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு...