- மன்னார் வளைகுடா, வங்கிக் கடல்
- ராமேஸ்வரம்
- மன்னார் வளைகுடா
- வங்கி கடல் பகுதி
- ராமேஷ்வர்
- மன்னார் வளைகுடா
- வங்கக் கடல்
- தின மலர்
ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் 100 கணக்கான விசைப்படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. மணிக்கு 45 முதல் 60கிலோ மீட்டர் வேகத்தில் சூரை காற்று வீசுவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடித்தலுக்கு செல்ல தமிழ்நாட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடைவிதித்துள்ளது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700க்கு மேற்பட்ட விசைப்படகுகளும் 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதே போல பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளிலும் 600க்கு மேற்பட்ட விசைப்படகுகளும்,1000க்கு மேற்பட்ட நாட்டு படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் மட்டும் 6000க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
The post மன்னார் வளைகுடா, வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று: மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.