கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 121.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 125.10 அடியாக உயர்ந்து உள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 125.10 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,395 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1,267 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 3,640 மில்லியன் கனஅடி. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 52.36 அடி.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,671 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 869 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 2,316 மில்லியன் கனஅடி. 126.28 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.57 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து வினாடிக்கு 3 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 87.42 மில்லியன் கனஅடி. 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு நீர்வரத்து 46 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 46 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 435.32 மில்லியன் கனஅடி.
The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 125 அடியை தாண்டியது appeared first on Dinakaran.