சென்னை: சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் பி.என்.சி. மில் பாலம் அருகே கையில் பையுடன் வேகமாக சென்ற 2 பேரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். இருவரும் பையில் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை ஓட்டேரி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். பையில் கஞ்சா வைத்திருந்த பட்டாளம் பகுதியை சேர்ந்த விஜய் (26), ரகு (44) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகி குணசேகரன் தங்களிடம் கஞ்சாவை கொடுத்து விற்கச் சொன்னதாக கைதான இருவரும் போலீசில் தகவல் தெரிவித்தனர்.
பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. புரசைவாக்கத்தை சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் (40) கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக நிர்வாகி குணசேகரன், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து, விஜய், ரகு மூலம் விற்றது அம்பலமாகியுள்ளது. பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.