தாய்லாந்து: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளனர். பாங்காக்கில் உள்ள பிரபல கிராண்ட் ஹயாட் எர்வான் ஹோட்டல் அறையில் தங்கிய 6 பேரும் இறந்து கிடப்பதாக ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்ட 6 பேரில் நால்வர் வியட்நாம் நாட்டையும் இருவர் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஆறு பேரில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளனர். போலீஸ் நடத்திய சோதனையில் 6 பேரும் அருந்திய தேநீர் கோப்பைகளில் சயனைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 6 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர். சயனைடை தேநீரில் கலந்து கொடுத்த நபரும் அதையே அருந்தி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீஸ் கூறியுள்ளது. மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை..!! appeared first on Dinakaran.