சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 20 முதல் 60 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்பட்ட பட்டுப்புடவைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஆடி மாதம் என்றாலே மக்கள் மனதில் முதலில் தோன்றுவது தள்ளுபடி விற்பனை தான். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைவு என்பதால் ஆடி மாதத்தில் ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி விற்பனையை அறிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஜவுளி கடை சார்பில் திருமண மண்டபத்தில் தள்ளுபடி விலையில் பட்டுப்புடவை விற்பனை நடைபெற்றது. 20 முதல் 60 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படும் புடவைகளை வாங்க அதிகாலை முதலே பெண்கள் தங்களது குடுப்பதினாருடன் திருமண மண்டபம் முன்பு காத்திருந்தனர். தள்ளுபடி விற்பனைக்கு கதவுகள் திறந்ததும் ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்று தங்களுக்கு பிடித்த புடவையை அள்ளிச் சென்றனர். சுப நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் பட்டுப்புடவைகளை விரும்பி அணிந்து வரும் நிலையில் ஆடி முதல் நாளிலேயே தள்ளுபடி விலையில் பட்டுப்புடவைகள் விற்பனை செய்தது காரைக்குடியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
The post ஆடி என்றாலே தள்ளுபடி தான்.. காரைக்குடியில் அதிகாலையிலேயே பட்டுப்புடவைகளை வாங்க குவிந்த பெண்கள்..!! appeared first on Dinakaran.