சாத்தூர், ஜூலை 17: சாத்தூர் நகராட்சி பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மெயின்சாலை, வெம்பக்கோட்டை சாலைகளின் இருபுறங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் செல்வதற்கு வசதியாக கால்வாய்கள் அமைத்திருந்தனர். இந்த வாய்க்கால்கள் சரிவர பராமரிப்பு செய்யப்படாததால் பல இடங்களில் மண் மேவி பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை காலங்களில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமடைந்தனர். இதையடுத்து, மழைநீர் தடையின்றி செல்ல வசதியாக சாலையை அகலப்படுத்தி ரூ.14 கோடி மதிப்பில் மழைநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், வாய்க்கால் அருகே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை சாலையோரமாக மாற்றி அமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சாத்தூர் நகரில் சாலை விரிவாக்கம் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.