- வட சென்னை அனல் மின்சாரம்
- நிலையம்
- சென்னை
- வடக்கு
- சென்னை அனல் மின் நிலையம்
- வடசென்னை அனல் மின் நிலையம்
- அத்திப்பாட்
- மீயெகூர்
- வட சென்னை
- வெப்ப மின் நிலையம்
- தின மலர்
சென்னை: வட சென்னை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக நேற்றுமுன்தினம் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 1வது நிலையின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கொதிகலன் பழுதை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.