×
Saravana Stores

வரலாற்று ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம்

சென்னை: அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று துறை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நமது பெருமைமிக்க கலை மற்றும் தொல்லியல் தொடர்பான வரலாற்றை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் வரலாற்று துறை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் விதமாக வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் “நமது கலை மற்றும் தொல்லியல் அறிவோம்” என்கிற தலைப்பில் பயிலரங்கம் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடக்கிறது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வரலாற்று துறையில் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இரண்டு நாள் நிகழ்விலும் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வரலாற்று ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Government Museum ,Tamil Nadu government ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...