×

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லட்

தேவையானவை

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 1
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மட்டன் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 200 மிலி
கான்பிளவர் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 5 டீஸ்பூன்.

செய்முறை

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தண்ணீரில் கழுவி, அதை நறுக்கி இட்லித் தட்டில் போட்டு, அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி, 15 நிமிடம் மூடி வேக வைக்கவும். வெந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், மட்டன் மசாலா, கான்பிளவர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். கலந்த மாவை உருண்டை பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கட்லெட்டை பொரிக்கவும். மறுபக்கம் திருப்பிப்போட்டு மீண்டும் பொரிக்கவும்.

The post சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லட் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!