சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தின் லாசன்னே பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளி-தெய்வானை சதேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக எடுத்து வந்த பால் குடங்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடிகள் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர். இதனையடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: