×
Saravana Stores

தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; மூவர் உயிரிழப்பு: உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம்


கோவை: கோவையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் மூவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரான அழகுராஜா விபத்து ஏற்படுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த அழகுராஜா பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விபத்து தொடர்பாக கைதாகி வெளிவந்த அழகுராஜா என்ற இளைஞர் மதுபோதையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அழகுராஜா என்பவர் உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.

அழகுராஜா தற்கொலைக்கு முயன்ற போது அவருடன் அறையில் தங்கியிருந்தவர்கள் மீது தீ பற்றி விபத்து ஏற்பட்டது. பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு கேனை தூக்கி ஏறிந்ததால் தீ வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர், அழகுராஜா உள்ளிட்ட மூவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90% தீக்காயத்துடன் தினேஷ்குமார், வீரமணி, மனோஜ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; மூவர் உயிரிழப்பு: உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Mover ,Goa ,Alaguraja ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி...