×
Saravana Stores

பில்லூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளின் வழியாக 8160 கன அடி நீர், மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீர் என மொத்தமாக 14,160 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பில்லூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Billur Dam ,KOWAI ,METUPPALAYAM ,Dinakaran ,
× RELATED மின்கசிவு காரணமாக ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து