×
Saravana Stores

வெங்கடாசலபுரம் உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

 

துறையூர், ஜூலை 16: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் மானிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.துறையூர் ஒன்றியத்தில் உள்ள முருகூர் அரசு உதவி பெறும் மான்ய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறையூர் மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post வெங்கடாசலபுரம் உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Venkatasalapuram Assisted School ,Thuraiur ,Thurichy District ,Upliyapura Uradachi Union ,Sena ,Stalin Kumar ,Government Awarded Secondary School ,Venkatasalapuram Uradachi ,Venkatasalapuram Relief School ,Dinakaran ,
× RELATED பவித்திரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பு