×
Saravana Stores

திருச்சி ஜீயபுரம் பைக் மீது லாரி மோதல் கட்டிட தொழிலாளி பலி

 

ஜீயபுரம், ஜூலை 16: திருச்சி உறையூர் இந்திராநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் லோகேஷ்வரன் (23). கட்டிட தொழிலாளி. இவக் தனது நன்பர் உறையூர் காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மனோஜ் உடன் கொல்லிமலை செல்வதற்காக திருச்சியிலிருந்து குளித்தலை நோக்கி பைக்கில் சென்றனர். பைக்கை லோகேஷ்வரன் ஓட்டினார். முருங்கப்பேட்டை அருகே சென்றபோது எதிரே திருச்சி நோக்கி சென்ற டாரஸ் லாரி பைக் மீது மோதியது.

இதில் லோகேஷ்வரன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மனோஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சென்ற ஜீயபுரம் போலீசார் லோகேஷ்வரன் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய முசிறி தண்டலைபுத்தூரை சேர்ந்த பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post திருச்சி ஜீயபுரம் பைக் மீது லாரி மோதல் கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Tiruchi Jeeyapuram ,Jiyapuram ,Ramalingam ,Lokeshwaran ,Indiranagar, Vrayyur, Trichy ,Iwak ,Trichy ,Kulithalai ,Manoj ,Vayayur Kamatshyamman Koil Street ,Kollimalai ,Jeeyapuram ,Dinakaran ,
× RELATED ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டமளிப்பு விழா