×
Saravana Stores

நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்

 

நீடாமங்கலம், ஜூலை 16: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 63 மையங்களில் தொடங்கப்பட்டது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத 1,053 கற்போருக்கு மையமானது ஜூலை-2024 முதல் நவம்பர் 2024 வரை முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நீடாமங்கலம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒளிமதி ஆகிய மையங்களில் நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் சம்பத் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சத்யா ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆனந்தன், ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு, இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர், கற்போர், மைய தன்னார்வலர் கலந்து கொண்டனர். விழாவில், கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு நூல்களை வழங்கி மையத்தை சிறப்பாக நடத்துவதற்கான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர் சம்பத் வழங்கினார். தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் உமா, சுமதி மற்றும் உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam Union ,Needamangalam ,Tiruvarur District ,
× RELATED நீடாமங்கலத்தில் வளர்ச்சி பணிகள் ஊராட்சி துறை இயக்குநர் ஆய்வு