- காமராஜ்
- அரசு நடுநிலைப் பள்ளி
- Ponnamaravati
- கல்வி அபிவிருத்தி நாள்
- கண்டியானந்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- கே.புதுப்பட்டி
- கேசரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள்
- அரசு
- நடுத்தரப் பள்ளி
- தின மலர்
பொன்னமராவதி,ஜூலை 16: பொன்னமராவதி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க.புதுப்பட்டி, கேசராபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மூன்று பள்ளிகளிலும் காமராஜர் திருவுருவப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித்தலைவர் செல்வி, தலைமையாசிரியர்கள் சுபத்ரா, மீனாட்சி, மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post பொன்னமராவதி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.